மாநகராட்சி ஊழியரை தாக்கியவர் கைது
மதுரை அவனியாபுரம் பகுதியில் மாநகராட்சி ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனி தேவர் மகன் மலை ராமன் (34) என்பவர் மதுரை மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். .அதே பகுதி யைச் சேர்ந்த சுகுமார் மகன் சிவராமன் என்பவரின் பழக்க வழக்கங்களை அவர் கண்டித்துள்ளார் . இதை அறிந்த அவர் தந்தை சுகுமார் ஆத்திரமடைந்து மலை ராமனை ஆபாசமாக பேசி கையாலும் ,டியூப் லைட் பட்டியாலும் தாக்கியுள்ளார். இது குறித்து மலைராமன் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.