புதுப்பட்டினம் கடற்கரையில் தூய்மைப் பணி, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன

தூய்மைப் பணி;

Update: 2025-07-20 14:38 GMT
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்த்குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் கடற்கரையில் வனச் சரக அலுவலர்  ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் பணிகள் (பீச் கிளீனிங்) சனிக்கிழமை நடைபெற்றது.  இதில், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை, கல்வித்துறை, வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், காதர் முகைதீன் மேல் நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு, கடற்கரைப் பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், அங்கிருந்த பொதுமக்களிடம் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் தான் போட வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.  தொடர்ந்து, "பிளாஸ்டிக்கை ஒழிப்போம், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்போம், வீட்டை, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்போம், ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்ப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Similar News