குடிநீர் குழாய் பணிகள் முடிந்து போக்குவரத்து துவக்கம்
குமாரபாளையம் குடிநீர் குழாய் பணிகள் முடிந்து போக்குவரத்து துவக்கப்பட்டது.;
குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, 24 மனை மாரியம்மன் கோவில் முன்பு, ஒரு வார காலமாக குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடந்து வந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், அந்த பகுதியில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதிக அளவிலான குடியிருப்புகள், விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், லக்ஷ்மி நாராயண சுவாமி கோவில், பெரிய மாரியம்மன் கோவில், தனியார் பள்ளிக்கு செல்லும் வழி, புறவழிச்சாலை இணைப்பு சாலை, என்பதால் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும். தற்போது குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணிகள் நிறைவு பெற்றதால், இந்த சாலையில் மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.