டூவீலர், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.;
குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் செல்வசுரேந்தர், 31. தச்சுவேலை. நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் பஜாஜ் பல்சர் டூவீலரில், உறவினர் பார்த்திபன், 27, என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, பள்ளிபாளையம் சாலை, கவுரி மெஸ் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, இவர்களுக்கு எதிரில் வேகமாக வந்த டாடா ஏ.சி. சரக்கு வாகனம் இவர்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், குமாரபாளையம் உடையார்பேட்டையை சேர்ந்த மாப்பிள்ளை மீரா, 38, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.