அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு பூப்பந்து போட்டி
குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு பூப்பந்து போட்டி நடந்தது;
குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடத்திய பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு பூப்பந்து போட்டி இரண்டு நாட்களாக நடந்தது. மாநில அளவில் 24 அணிகள் பங்கேற்றன. இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை காந்தரூபி வரவேற்று தலைமை வகித்தார். மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், வைகாப் விழுப்புரம் அணி இரண்டாம் இடத்தையும், சென்னை சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் மூன்றாம் இடத்தையும், செயின்ட் ஓசூர் ஜான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி நான்காம் இடத்தையும், குமாரபாளையம், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஐந்தாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் கோப்பைகள் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா சிட்னியை சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் முதல் பரிசாக 14 ஆயிரம் ரூபாயை வெற்றி பெற்ற அணிக்கு வழங்கினார். இரண்டாம் பரிசாக பத்தாயிரம் 10 ஆயிரம் ரூபாயை டாக்டர் தினேஷ் வழங்கினார். கோவை கண்ணன் மூன்றாம் பரிசாக 8 ஆயிரம் ரூபாய் வழங்கினார். பவானி, நகைக்கடை வேலுச்சாமி நான்காம் பரிசாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார். ஆஸ்திரேலியா சிட்னியை சேர்ந்த பாபு மயில்வாகனம் ஐந்தாம் பரிசாக ஐயாயிரம் வழங்கினார். . தமிழ்நாடு பூப்பந்து கழகம் பொதுச்செயலர் டாக்டர் விஜய், திருப்பூர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இலவசமாக மண்டபத்தையும், வெற்றி வாய்ப்பை இழந்த மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயையும் ஆடிட்டர்கள் சிவக்குமார், நந்தகுமார் வழங்கினார்கள். முருகன், விஜயா, கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழு உமாமகேஸ்வரி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியை எலிசபெத், முன்னாள் உதவி தலைமை ஆசிரியை சாரதா ஆகியோர் கௌரவ விருந்தினராக பங்கேற்றனர். இதனை குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அப்பாதுரை மற்றும் ஆசிரியர்கள் சண்முகம் மாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.