குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை தினமான நேற்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். தற்போது குமரியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடுப்பனையில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அந்த பகுதியில் வாலிபர்கள் குளித்தது மட்டுமின்றி, மது அருந்திவிட்டு நீரில் குதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.