உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் கலெக்டர்,எம்எல்ஏ ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் கலெக்டர்,எம்எல்ஏ ஆய்வு;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் செங்கல்பட்டு ஆட்சியர் தி.சினேகா மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று முகாமினை பார்வையிட்டனர். இந்த முகாமில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். இந்நிகழ்வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.இராஜன்,ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,கழக நிர்வாகிகள் அருள்,சுப்பிரமணி,இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.கே.பிரபு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி ,வட்டாட்சியர் ஆறுமுகம்,மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.