உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு;
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியிலுள்ள 1,2 மற்றும் 4 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 13 துறைகள் சார்பில் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்தி தண்டபாணி, நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஜி.லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து வீட்டு வரி பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆவண சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், நகர்மன்ற உறுப்பினர்கள், துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.