கந்தம்பாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
கந்தம்பாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை கள்ளக்காதலன் கைது.;
பரமத்திவேலுலூர், ஜூலை.20: பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே நடந்தை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (39), ரிக் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி விஜயராணி (30) தோட்ட த்தில் விவசாயம் செய்து கொண்டு மாடுகளை வளர்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் மகன் சதீஷ் (26). பால் வியாபாரி, அப்பகு தியில் விவசாயிகளின் மாடுகளில் பால் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மாதத்தில் கை குழந்தை உள்ளது. சக்திவேல் ரிக் வண்டியில் வேலை பார்க்க வெளிமாநிலங்களுக்கு மாத கணக்கில் சென்று விடுவார். அப்போது விஜயராணிக்கும் சதீஷுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 10-ந் தேதி மதியம் விஜயராணி மருத்துவமனைக்கு செல்வதாக கணவர் சக்திவேலிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற விஜயராணி வீடு திரும்பாததால் சக்திவேல் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். இது குறித்து நல்லூர் போலீசாரில் தனது மனைவியை காணவில்லை என அவர் புகார் செய்தார். நல்லூர் போலீசார் விஜயராணியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டது யார் என விசாரணை மேற்கொண்ட போது பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் என்பது மேலும் தெரியவந்தது காணாமல் போன அன்று செல்போனில் சதீஷ் பலமுறை பேசியதும் தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சதீஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயராணிக்கும் எனக்கும் கடந்த 3 வருடமாக கள்ளக்காதல் தொடர்பு இருந்தது. இருவரும் நடந்தை அருகே கோணங்காடு பகுதியை சேர்ந்த பத்தியப்பா தோட்டத்தில் பகலில் சந்தித்து கொள்வோம். சம்பவத்தன்று விஜயராணி போனில் அழைத்ததால் சம்பவ இடத்திற்கு சென்றேன். மேலும் அன்று வெளியூரில் உள்ள மனைவியையும், குழந்தையும் பார்க்க தான் செல்வதாக கூறிய போது நீங்கள் செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அங்கு இருந்த காலி பீர் பாட்டிலை எடுத்து கையில் உடைத்து கொண்டு நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். நான் மனைவியை பார்க்க செல்கிறேன் என கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து வந்து விட்டேன். மாலை விஜயராணி வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு திரும்பாதது தெரியவந்தது. இருவரும் சந்தித்த இடத்துக்கு சென்று பார்த்த போது விஜயராணி சேலையால் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கீழே இறக்கி பார்த்த போது. அவர் உயிரிழந்து பல மணி நேரம் ஆனது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த அவரது துணிமணிகள் செல்போன் அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினேன். போலீசார் செல்போன் மூலம் எங்களது தொடர்பை அறிந்து கொண்டனர். என கூறினார். அதன் பேரில் நல்லூர் போலீசார் சதீஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.