அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம்.
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது;
அரியலூர், ஜூலை.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 10-ந் தேதி தொடங்கி 20 -ந் தேதி வரை தமிழகம் முழுவதும் தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீக்கதிர் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் பத்தாம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நகர பகுதிகளில் ஆண்டு சந்தா சேர்க்கும் பணியில் இடை கமிட்டிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகரில் தீவிர சந்தா சேர்ப்பு பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், தமிழ் மாநிலக்குழு உறுப்பினருமான ஐ.வி.நாகராஜன் உள்ளிட்ட சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி மற்றும் மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர சந்தா சேகரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி முழுவதும் தீவிரமாக செயல்படுத்தி அனைத்து கட்சி கிளைகளுக்கும் தீக்கதிர் நாளிதழ் சென்றடைவதற்கான அந்த முழுமையான பங்கினை ஆற்றிட வேண்டும் என்கிற முறையில் உணர்வு பூர்வமாக இந்த சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருவதாக திருச்சி பதிப்பு தீக்கதிர் நாளிதழ் பொறுப்பாளரும், தமிழ் மாநில குழு உறுப்பினருமான ஐ.வி நாகராஜன் தெரிவித்தார்.