கீழடி அகழாய்வு அறிக்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளியிட வலியுறுத்தல்
தமுஎகச மாநாடு;
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், தஞ்சை மாநகரக்கிளை 16 ஆவது மாநாடு, தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் சரோஜ் நினைவகம், தோழர் சா.ஜீவபாரதி நினைவரங்கில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகரத் தலைவர் பிம்பம் சாகுல் தலைமையில் நடைபெற்றது. மாநகர இணைச் செயலாளர் ச.புவனேஸ்வரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநகர இணைச் செயலாளர் கவிஞர் க.முரளி வரவேற்றார். மாநகர நிர்வாகக் குழு உறுப்பினர் சா.தமிழ்வாணன் பாடல்கள் பாடினார். மாநகர நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.திருநாவுக்கரசு, சா.கோதண்டபாணி ஆகியோர் கவி பாடினர். தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் துவக்கவுரையாற்றினார். மாநகர நிர்வாகக்குழு உறுப்பினர் பு.சந்தோஷ் குமார் திரைப்படம் குறித்து விமரிசனம் செய்தார். மாநகரச் செயலாளர் லெ.ஸ்ரீதர் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் ப.சத்தியநாதன் வாழ்த்திப் பேசினார். மேனாள் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் நிறைவுரையாற்றினார். மாநகரப் பொருளாளர் த.சுத்தானந்தன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு மாநகரத் தலைவராக சா.கோதண்டபாணி, செயலாளராக லெ.ஸ்ரீதர், பொருளாளராக வி.திருநாவுக்கரசு உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாநகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் "சரஸ்வதி மஹால் நூலகத்தை உலகத் தரத்தில் மேம்படுத்தி, உரிய நிதி ஒதுக்கி, பல்நோக்கு ஆய்வு தரத்தில், தமிழ் மொழியின் ஆய்வினை மேம்படுத்த வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளியிட வேண்டும். NCERT கல்வி திட்டத்தில் காவிக் கொள்கைகளை திணிக்க முயற்சிக்கும் செயல்முறைகளை தடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.