இடையாத்தி, பட்டுக்கோட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 

முகாம்;

Update: 2025-07-21 16:42 GMT
-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பட்டுக்கோட்டை ஊராட்சி கொண்டிகுளம், கழுகுபுலிக்காடு, பண்ணவயல், நடுவிக்கோட்டை ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கொண்டிகுளம் அன்பு திருமண மண்டபத்திலும், பேராவூரணி ஊராட்சிக்குட்பட்ட இடையாத்தி, வாட்டாத்திக்கோட்டை, பூவாளூர் ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், வாட்டாத்திக்கோட்டை கே.பி.எஸ்.திருமண மண்டபத்திலும்,  "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், உதவி இயக்குநர் (தணிக்கை) பாஸ்கரன், வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை), சுந்தரமூர்த்தி (திருவோணம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான் கென்னடி, வீரமணி (பட்டுக்கோட்டை ), செல்வேந்திரன், சாமிநாதன் (பேராவூரணி), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணவயல் ராஜாத்தம்பி, பேராவூரணி வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் இளங்கோ,  செருவாவிடுதி ரா.த.பன்னீர்செல்வம், த.பன்னீர் செல்வம், உடையப்பன், ஜானகிராமன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News