சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள, சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச. நாராயண சர்மா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி,வட்டாட்சியர் ஆறுமுகம்,காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் K.P. ராஜன்,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.