கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணி திட்டம்.
கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணி திட்டம் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், ஜூலை. 22: பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் தேசிய மாணவர் படை, வேலூர் அரிமா சங்கம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, கபிலர்மலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியோர் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் தலைவர் இர.சோமசுந்தரம், கல்லூரியின் செயலர் மஹிந்தர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் பொ.சாந்தி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் ஆர்.மாதவன்,எம்.அருணாராணி மு.பிரபு,எம்.ஜெகன்,மு.சிவக்குமார், ஆர்.கன்னதாசன், த.வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டுனர். கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். இதில் 82 யூனிட் இரத்தம் தானம் பெறப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கந்தசாமி கண்டர் கல்லூரி மற்றும் வேலூர் அரிமா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.