ஓசூரில் காரில் ஜெலட்டின் குச்சிகள் கடத்தியவர் கைது.

ஓசூரில் காரில் ஜெலட்டின் குச்சிகள் கடத்தியவர் கைது.;

Update: 2025-07-22 14:07 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலை சானசந்திரம் ஜங்ஷனில் நேற்று ஓசூர் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும்படி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது காரில் 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர்கள் ஆகியவை இருப்பது. தெரிய வந்தது இதை அடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (41) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் ஆகிய வற்றை போடீலசார் பறிமுதல் செய்தனர்.

Similar News