ஓசூர் அருகேவாலிபரை தாக்கிய எட்டு பேர் கைது.
ஓசூர் அருகேவாலிபரை தாக்கிய எட்டு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் ஓசூர் ஒன்னல் வாடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் உணவு வினியோகம் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த நந்தகுமார் என்பவர் கடந்த 13-ஆம் தேதி அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு ராஜேஷ் தான் காரணம் என நந்தகுமாரின் உறவினர் முருகேஷ் (42) ஆத்திரத்திரம் அடைந்த அவர் தனது உறவினர்கள் 7 பேருடன் சேர்ந்து ராஜேசை தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜேஷ், ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.