திருவேங்கடத்தில் மண் சரிவு ஏற்பட்டு வாலிபர் பலி
மண் சரிவு ஏற்பட்டு வாலிபர் பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடத்தில் கூட்டு குடிநீர் தண்ணீர் பைப் லைன் பதிக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது, அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரா குமார் (25) என்பவர் பைப் லைன்களை குழிக்குள் பைப்புகளே சரி செய்த போது மண் சரிந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.