உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், அமைச்சர்,கலெக்டர் பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், அமைச்சர்,கலெக்டர் பங்கேற்பு;

Update: 2025-07-23 07:16 GMT
சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் சினேகா, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கினார். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜனனிராஜாகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News