செல்போன் திருட்டு: பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு !

பேருந்தில் பயணம் செய்த பயணி இடம் செல்போனை திருடிய நபர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு.;

Update: 2025-07-25 03:37 GMT
கருமத்தம்பட்டியில் இருந்து கோவைக்கு பேருந்தில் நேற்று பயணித்த மதிவாணன் என்பவர், தனது செல்போன் காணாமல் போனதை கவனித்தார். சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த ஒருவரை சோதனையிட்டதில், அவரது செல்போன் அந்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டது. பேருந்து பயணிகளின் உதவியுடன் அவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், ராமசாமி (சத்தியமங்கலம்) என்பவர் முந்தைய திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்றும், பயணத்தின்போது செல்போன்கள் திருடுவது அவரது வழக்கமான செயலாக இருக்கலாம் என்றும் தெரிய வந்தது. அவர்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News