விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (22.07.2025) 291.96 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜீலை மாதம் முடிய இயல்பு மழையளவை விட97.48 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் ஜீன் 2025 மாதம் வரை நெல் 74 எக்டர், சிறுதானியங்கள் 13,141 எக்டர் பயறு வகைகள் 2,771 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 13,806 எக்டர், பருத்தி 466 எக்டர் மற்றும் கரும்பு 1199 எக்டர் என மொத்தம் 31,457 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 150 எக்டர், கத்திரி 101 எக்டர், வெண்டை 83 எக்டர், மிளகாய் 22 எக்டர், மரவள்ளி 129 எக்டர், வெங்காயம் 661 எக்டர், மஞ்சள் 580 எக்டர் மற்றும் வாழை 56 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (TNAPEx) மூத்த மேலாளர் செல்வி. T.வினு கலந்து கொண்டு உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதலுக்கான பயிற்சி, மதிப்புக்கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் போன்ற விவரங்களை நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்.9500261727, 9500261827.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , அவர்களிடம் விவசாய பெருமக்கள் 130-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர்.ரெ.சுமன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜி.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் மற்றும் இதர துறை அலுவலர்கள் மற்றும் விசாயிகள் கலந்து கொண்டனர்.