அழகர் கோயிலில் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள்
மதுரை அழகர் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பதினெட்டாம்படி கருப்பு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர்கோவிலின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 24) ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தனக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து திருக்கோவிலில் செலுத்தி வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து இரவு பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவிலின் கதவுகளுக்கு சந்தன காப்பு மற்றும் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.