செருவாவிடுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 

முகாம்;

Update: 2025-07-25 16:55 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், செருவாவிடுதி வடக்கு, செருவாவிடுதி வடக்கு, பெரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளுக்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் செருவாவிடுதி தெற்கு ஸ்ரீ அம்பாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  நிகழ்வில், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் நாராயணன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை) சுப்பிரமணியன் (பேராவூரணி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், டாக்டர் வி.சௌந்தர்ராஜன், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மனைப்பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

Similar News