அகில இந்திய ஓய்வூதிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய ஓய்வூதிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-26 00:28 GMT
அரியலூர், ஜூலை 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அகில இந்திய தபால்}தந்தி மற்றும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம், அகில இந்திய ஓய்வூதியர்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 8 ஆவது ஊதியக்குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 6 ஆவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். பணியின் போது இறந்துள்ள மத்திய பணியாளர்களை கணக்கெடுத்து, அவர்களது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். படவிளக்கம்: அரியலூரில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய ஓய்வூதியர்களின் கூட்டமைப்பினர்.

Similar News