ஓடசல்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஓடசல்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு;
தர்மபுரி மாவட்டம் ஓடசல்பட்டி சமுதாய கூட மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது இதில் ராணி மூக்கனூர்,கெரகோடஹள்ளி, போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டை மகளிர் உரிமைத்தொகை பட்டா மாற்றம் நிலாவை விடு குடிநீர் வசதி மருத்துவ வசதி பல்வேறு கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கினார்கள். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மேலும் முகாமில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்