டையலர் ராஜா கைது: ஜெயிலர் மற்றும் சைதா கொலை வழக்குகள் மீண்டும் தீவிரம்!

டைலர் ராஜா எதிர்க்கும் வழக்குகள் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.;

Update: 2025-07-26 06:09 GMT
மதுரை ஜெயிலர் ஜெயபிரகாஷ் (1997) மற்றும் நாகூரில் சைதா (1996) என்ற பெண் கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்த டைலர் ராஜா, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் தேடப்பட்ட இவர், 28 ஆண்டுகளாக கர்நாடகாவில் ஷாஜகான் என்ற பெயரில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்து கோவைக்கு கொண்டு வந்தனர். கோவை சிறையில் ஐந்து நாள் காவலில் விசாரணைக்கு பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம், தற்போது மதுரை மற்றும் நாகூர் போலீசார் கைது ஆணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில், டைலர் ராஜா எதிர்க்கும் வழக்குகள் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

Similar News