கோவையில் லஞ்சம் வாங்கியதாக இந்து அறநிலைத்துறை அதிகாரி கைது : ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு !

லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஜாமீன் கோரி மனு தாக்கல்.;

Update: 2025-07-26 06:11 GMT
கோவை இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றியவர் இந்திரா. இவர் கடந்த 17 ம் தேதி ஒரு கோவில் விவகாரத்தில் சுரேஷ்குமார் என்பவரிடம் ரூபாய் 1.5 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுதலை செய்யக் கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்திரா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Similar News