கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை : ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் கொலை – ஹோட்டல் தொழிலாளி கைது

ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்து கேஸ் ஸ்டவ் பர்னர் கம்பியால் அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்.;

Update: 2025-07-26 06:12 GMT
கோவை கரும்புக்கடை பகுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த நவீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தங்கி இருந்த அறையில் ரத்த காயத்துடன் கடந்த 22ம் தேதி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த ஹோட்டல் தொழிலாளி தயாநிதி மாயமாகியிருந்ததால் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா மூலம் தயாநிதி மதுரை சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மதுரையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நவீன் தொடர்ந்து ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்து கேஸ் ஸ்டவ் பர்னர் கம்பியால் அடித்து கொலை செய்ததாக தயாநிதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Similar News