காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2025-07-26 06:15 GMT
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விராலியூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினா என்ற பெண் நேற்று முன்தினம் காலை காலைக் கடன் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை, அவரை தாக்கியது. உடனே தகவல் அறிந்த வனத் துறையினர், யானையை விரட்டிய பின்னர், ரத்தினாவை மீட்டு ஆம்புலன்ஸில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News