கோவை: ஆட்டை தாக்கிய தெரு நாய்கள் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு !

கும்பலாக சேர்ந்த தெரு நாய்கள் ஒரு ஆட்டை கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2025-07-26 06:19 GMT
கோவை கரும்புக்கடை சலாமத் நகர் பகுதியில், தெரு நாய்கள் நேற்று ஒரு ஆட்டைக் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள 86-வது வார்டில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில், இரவில் மீண்டும் நாய்கள் விடப்படுவதால் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெரு நாய்கள் கோழி, ஆடு, மாடு போன்றவற்றை தாக்குவது வழக்கமாகிவிட்டதாகவும், மக்கள் வெளியே செல்லவே பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நாய்கள் மையத்தை மாற்றவும், தெரு நாய்களை பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News