கோவை: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி: வனத் துறையின் பசுமை பணி
தமிழக வனத்துறை, ஆணைமலை புலிகள் காப்பகம், கோவை வனப் பிரிவு மற்றும் கோவை வன வரம்பு இணைந்து, பசுமை பாதுகாப்பை நோக்காகக் கொண்டு வனப்பகுதியில் மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
தமிழக வனத்துறை, ஆணைமலை புலிகள் காப்பகம், கோவை வனப் பிரிவு மற்றும் கோவை வன வரம்பு இணைந்து, பசுமை பாதுகாப்பை நோக்காகக் கொண்டு வனப்பகுதியில் மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், யுவபாரதி பப்ளிக் பள்ளியின் 950 மாணவர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் TREE அமைப்பைச் சேர்ந்த சுற்றுச் சூழல் தொண்டர்கள் கலந்துகொண்டனர். AVOID PLASTIC என்ற வாசகத்துடன் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வனத்துறையின் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.