நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம், பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து மாநகர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.