காளப்பநாயக்கன்பட்டி பஜனை மடாலயத்தில் ஆடிப்பூரம் விழா!
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்மையார் சுவாமி படத்திற்கு மலர் மாலைகள் சூட்டி பல்வேறு விதமான ஆராதனைகள் நடைபெற்றன;
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள பஜனை மடத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்மையார் சுவாமி படத்திற்கு மலர்மாலைகள் சூட்டி பல்வேறு விதமான ஆராதனைகள் செய்யப்பட்டன முன்னதாக மூலவர் ஸ்ரீ கிருஷ்ணசாமிக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.