கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தக்கலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் இந்திய மருத்துவ பிரிவு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கிவைத்து பேசினார். இணை இயக்குநர் மருத்துவம் சகாய ஸ்டீபன்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, பத்மநாபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளை சந்தித்து அவர்களின் உடல்நலம் மற்றும் மருத்துவர்களால் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.