அரசு கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும், கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழுவும் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.ஒ. சுகந்தி பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்தும், வாழ்த்தியும் பேசினார். ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ. செந்தில்குமார் பங்கேற்று சாலை விதிகள் குறித்து பேசினார்கள். சேலம் ரேவதி கலைக்குழுவினர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பாடல்கள், சிறு நகைச்சுவை நாடகம், கரகாட்டம், வில்லுப்பாட்டு முதலியவை நடத்தி, மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் குறும்படம் திரையிடப்பட்டது. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேராசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் பொறுப்பாளர் உதவிப் பேராசிரியர் ஞானதீபன் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.