முப்பந்தல் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

குமரி;

Update: 2025-07-29 15:29 GMT
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடைவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் சீர்வரிசை செய்துவிட்டு அங்கிருந்து ஆலமூடு அம்மன் ஜோதி புறப்பட்டு பல ஊர்கள் வழியாக ஊர்வலமாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று மாலையில் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வரும் நிகழ்சியும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இன்று (29-7-2025) செவ்வாய்க்கிழமை பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. காலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் பூங்கரகம், முளைபாரி, பால்குடங்கங்கள் சுமந்து வந்தனா. சில பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் வந்தனர்.

Similar News