தமிழ் சிந்தனைப் பேரவையின் தமிழ்ச் சுடர் விருது வழங்கும் விழா

தமிழில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ் சிந்தனைப் பேரவை தமிழ்ச் சுடர் விருது வழங்கும் விழா;

Update: 2025-07-30 07:29 GMT
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை மாதம் முழுவதும் கல்வி வளர்ச்சி மாதமாக தமிழ் சிந்தனைப் பேரவை கொண்டாடும் விதமாக அரசுப் பொதுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் 2025 ஆம் ஆண்டு அரசுப் பொதுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச் சுடர் விருதுகளை தமிழில் தயக்கமின்றி பேசுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் தமிழறிஞர் ரமேஷ் குமார் அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு வரவேற்புரை நிகழ்த்த தமிழ் சிந்தனை பேரவை துணைச் செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். தமிழ் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் பூபதி, சுந்தரராஜன், விருதாளர்கள் அஜய், செல்வகுமரன், அருள்குமரன், கிருஷ்ணன், தர்ஷண பாலா, ஸ்ரீ ராமு, லோகேஷ்குமார், தரணி குமார், தாமஸ் ரிச்சர்டு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் ஆசிரியர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

Similar News