நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்தவர் மீது வழக்குப்பதிவு
பாப்பாரப்பட்டி அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தவர் மீது காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை;
நீர்வழிப்பாதை சேதப்படுத்தியவர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் தனது பட்டா நிலத்தின் அருகாமையில் அமைந்துள்ள நீர்வழிப் பாதையை பாதையை ஜேசிபி எந்திரம் கொண்டு சமன்படுத்தியுள்ளார்.. இந்த நிலையில் அப்பகுதியில் களஆய்வுக்காக வந்த கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி இது குறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மற்றும் ஜேசிபி எந்திரத்தை பாப்பிரப்பட்டி காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.