ஊரணிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 

முகாம்;

Update: 2025-07-30 17:48 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஊராட்சி, வெட்டுவாக்கோட்டை, உஞ்சியவிடுதி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊரணிபுரம் சித்தி விநாயகர் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார்.  இதில், தாட்கோ மேலாளர் தியாகராஜன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், குமார், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உஞ்சிய விடுதி வெங்கடாசலம், பொன்மணி ராமு, ஜோதிபாசு, செல்வம், காமராஜ், மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், மனைப்பட்டா, காவல்துறை சம்பந்தப்பட்ட ஏராளமான மனுக்களை பொதுமக்கள் கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினர்.

Similar News