மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி 

பலி;

Update: 2025-07-30 18:01 GMT
தஞ்சாவூர் அருகே செல்லப்பன்பேட்டையில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அருகே செல்லப்பன் பேட்டை பகுதியில், புதிதாக மின் கம்பங்கள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராஜஸ்தானை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் எடுத்து மேற்கொண்டு வருகிறார். அவரிடம் ராஜஸ்தான் மாநிலம் பரல்பூர் பஞ்சமந்திர் பகுதியை சேர்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் விஜய் பால் சிங் (30)  வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை மதியம் செல்லப்பன்பேட்டை பகுதியில் மின் கம்பம் நடும் பணியில் விஜய் பால் சிங் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே விஜய் பால் சிங் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வல்லம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் பால் சிங் உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,  வடமாநில தொழிலாளி ஒருவர் தஞ்சை பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News