பேராவூரணி ஒன்றிய ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

திறன் பயிற்சி;

Update: 2025-07-30 18:05 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் 6முதல் 9 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான திறன் பயிற்சி பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  இரண்டு நாட்கள் நடைபெற்றது.  இப்பயிற்சிக்கு பேராவூரணி பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி முன்னிலை வகித்தார். பயிற்சிக்கு  வருகை தந்த அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். இப்பயிற்சியில்150 க்கும் மேற்பட்ட  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  இதில், ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் மாணவர்களின் தமிழ், ஆங்கில மற்றும் கணித அடிப்படை திறன்களுகள் வளர்ப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது.  இப்பயிற்சிக்கு, வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.  இப்பயிற்சியின் வட்டார ஒருங்கிணைப்பாளராக காலகம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமநாதன் செயல்பட்டார்  இறுதியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஷாஜிதாபானு நன்றி கூறினார். பயிற்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்  மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர்

Similar News