உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்:;
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் லக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள அமுதம் மஹால் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாம் துவக்க விழாவில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார். இந்த முகாமில் 1561 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம்,; காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.பி.பாலசுப்பிரமணியன், ஈரோடு மாவட்ட திட்டஇயக்குனர் பிரியா, உதவி செயற்பொறியாளர் கற்பகம், மொடக்குறிச்சி தாசில்தார் சிவசங்கர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.