உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது;
சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். முகாமில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பொது மக்களிடமிருத்து பெறப்பட்ட மனுக்கள் பரிசிலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று தாசில்தார் ராஜாமணி தெரிவித்தார். மேலும் இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகப்பிரியா, சிவக்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.