பெண்ணைக் கொன்று நகையை கொள்ளடித்துச் சென்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ....*
பெண்ணைக் கொன்று நகையை கொள்ளடித்துச் சென்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ....*;
பெண்ணைக் கொன்று நகையை கொள்ளடித்துச் சென்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு .... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ( 31 ) இவர் அதே பகுதியை சேர்ந்த தனக்கு தெரிந்த மோகனபிரா என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் .அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை சரமாறியாக அடித்து தலையணையை கொண்டு முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார் இந்த கொலை தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர் . மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார் .இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி பெண்ணை தலையனையால் அமுக்கி கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் நகையை கொள்ளடித்து சென்றதற்கு 10 ஆண்டும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் மேலும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.