மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் :பட்டுக்கோட்டையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராளுமன்ற விவாதத்தில், ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, பாஜகவினர் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் தொலைபேசியில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, வியாழக்கிழமை காலை, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கண்டன உரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கு.பெஞ்சமின், மோரிஸ் அண்ணாதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், சிஐடியு என்.கந்தசாமி, தமுஎகச தி.தனபால், பாக்யபாலா மற்றும் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்தும், சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங் பரிவார் நபரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.