உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1561 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது கலெக்டர் தகவல்;
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் லக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. இந்த முகாமில் 1561 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நல அட்டை வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.அதற்கான ஆணைகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் தாசில்தார் சிவசங்கர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, தி.மு.க ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.