த.வெ.க. பெண் நிர்வாகி மண்டை உடைப்பு
சென்னிமலை அருகே பரபரப்பு சம்பவம் த.வெ.க. பெண் நிர்வாகி மண்டை உடைப்பு சlக்கடை கால்வாயை சுத்தம் செய்ததால் தி.மு.க.வினர் தாக்குதல்;
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடித்த ஏகாண்டாம் பாளையம், வாய்க்கால் புதூர், காந்திநகரை சேர்ந்தவர் பானுப்ரியா. இவர் தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு கிழக்கு மாவட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சாக்கடை அடைக்கப்பட்டு இருப்பதால் சுத்தம் செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து சாக்கடை கால்வாயில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அந்த சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.இந்நிலையில் இரவு 9 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி 3 பேர் பானுப்பிரியாவிடம் நீங்கள் எப்படி சாக்கடை கால்வாயை தூர் வாரலாம் என்று கூறி அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை எடுத்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் அவர் ரத்த காயத்துடன் சிகிச்சை பெறும் வீடியோவை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வெளியிட்டு இதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் தமிழக வெற்றி கழகம் சார்பில் வக்கீல் ஆலோசனையுடன் சென்னிமலை போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தமிழக வெற்றி கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.