தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடுப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்த கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாவட்ட அளவிலான போதைப் பொருள் விழிப்புணா்வுப் பணியில் இரண்டாம் பரிசு பெற்றது. அதற்கான சான்றிதழ் மற்றும் ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையையும் கல்லூரி போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறைத் தலைவருமான கி.சரவணனிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா். விருது பெற்றவரை, கல்லூரி முதல்வா் அ.மாதவி, வேதியியல் துறைத் தலைவா் மா.மீனாட்சிசுந்தரம், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத்தலைவா் சீ.தங்கராசு, தோ்வு நெறியாளா் வெ.பாஸ்கா் மற்றும் துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.