சூளகிரி அருகே தந்தை- மகனை தங்கிய நபர் கைது.
சூளகிரி அருகே தந்தை- மகனை தங்கிய நபர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள அளேசீபம் அடுத்த பண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி எல்ராஜ் (56) இவரும் இவருடைய (17) வயதுடைய மகன் கல் லாரியில் படித்து என்பவரும் ஏனுசோனை பேருந்து நிறுத்தம் அருகில் நின்றனர். அப்போது ஏனுசோனை பகுதியை சேர்ந்த புட்டப்பா (25) என்பவர் அந்த வழியாக வந்த போது அவருக்கும், எல்ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த புட்டப்பா, தந்தை, மகன் ஆகிய இரண்டு பேரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து எல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து புட்டப்பாவை கைது செய்தனர்.