பரமத்தி வேலூர் அருகே பாய் தயாரிக்கும் கோரை தீப்பிடித்து எறிந்து சேதம்.
பரமத்தி வேலூர் அருகே பாய் தயாரிக்கும் கோரை தீப்பிடித்து எறிந்து சேதம்.;
பரமத்தி வேலூர், ஆகஸ்ட்.1: பரமத்தி வேலூர் தாலுகா அணிச்சம்பாளையம் பகுதியில் பாய் தயாரிக்கும் கோரை பயிர் செய்யப்பட்டிருந்தது. கோரை அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கோரையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆர்ம்பித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கோரையில் பற்றி எரிந்த தீயை அணைக்க ணக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. வேகமாக தீ எரிய தொடங்கியதால் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணை ப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கோரையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள விவசாய தோட்ட ங்களுக்கு தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஏக்கர் கோரை தீயில் எரிந்து நாசமாயின.