அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
பணி ஓய்வு;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில் 38 வருடங்களாக பல்வேறு பணிகளில் பணியாற்றி முதல்வர் விருது, அண்ணா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று, அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வேம்பு வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலோரக் காவல் குழும துணைக் கண்காணிப்பாளர் முருகன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன், கடலோரக் காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மணமேல்குடி காவல் ஆய்வாளர் முத்துக்கண்ணு, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆய்வாளர் சுபா, சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக, பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வேம்பு ஏற்புரையாற்றினார்.